Posts

Showing posts from March, 2025

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கல்லீரல் பாதிக்கப்பட்ட இளம் பெண் மனு.

Image
கரூர் மாவட்டம் காசிபாளையம் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், ஜோதி தம்பதியினர்-இரண்டு குழந்தைகளுடன் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். தனது மனைவிக்கு கல்லீரல் செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ஒரு மாதத்திற்குள் ஆபரேஷன் செய்யவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும்,  சிகிச்சைக்காக சுமார் 25 லட்சத்திற்கு மேல் செலவாகும் என்பதால் கூலி வேலை செய்து அன்றாட உணவுக்கு செலவு செய்வதால் மிகவும் சிரமப்பட்டு வருவதாக கூறி மருத்துவ உதவிக்கு நிதி உதவி கேட்டு குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்