Posts

Showing posts from April, 2025

கரூரில் மூத்த வழக்கறிஞரை கத்தியால் குத்திய கொலை முயற்சி - சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் மூன்று பேரை கைது செய்த போலீசார்

Image
கரூரில் மூத்த வழக்கறிஞரை கத்தியால் குத்திவிட்டு 6 லட்சம் பணம், தங்கச் செயின்கள், தங்க காசுகளை கொள்ளையடித்த அவரிடம் பணிபுரிந்த ஜூனியர் வழக்கறிஞர் தனது நண்பர்களுடன் கை வரிசை - சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் வசிப்பவர் ஆறுமுகம் (வயது 71). இவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். நேற்று முந்தினம் இரவு வீட்டில் இருந்த போது மர்ம நபர்கள் 3 பேர் முகத்தில் மாஸ்க் அணிந்து கத்தியுடன் வீட்டினுள் நுழைந்து, கத்தியை காட்டி மிரட்டியும், கத்தியால் வழக்கறிஞர் ஆறுமுகத்தின் முகத்தில் குத்தியும் உள்ளனர்.  அப்போது வழக்கறிஞர் வீட்டில் இருந்த 6 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க செயின்கள், தங்க காசுகளை கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள வழக்கறிஞர் ஆறுமுகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஃபெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளை கும்பலை போலீசார...

கரூர் கல்யாண பசுபதிஸ்வர் ஆலயத்தில் ராகு, கேது பெயர்ச்சி விழா

* கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ராகு, கேது பெயற்சி விழா.* தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சௌந்தர் நாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ராகு, கேது பெயர்ச்சி விழா இன்று நடைபெற்றது. இன்று மாலை ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் . கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அது சமயம் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அது தொடர்ச்சியாக ஆலயத்தில் சிவாச்சாரியார் ராகு கேதுக்கு சிறப்பு அலங்காரம் செய்தார். தொடர்ந்து உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு லட்சார்ச்சனை நடைபெற்று தொடர்ச்சியாக ராகு, கேதுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் நடைபெற்ற ராகு கேது பெயர்ச்சி விழாவை காண ஏராளமான ஆன்மிக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் உள்ளிட்ட நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.