வெண்ணமலை அருகே வீட்டில் பற்றி எரிந்த தீ, ஏசி மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதம் - தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்.
கரூர் அருகே வீட்டில் பற்றி எரிந்த தீ, ஏசி மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதம்: தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்: சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை.
கரூர் மாவட்டம் வெண்ணமலை அருகே உள்ள அன்பு நகர் மூன்றாவது கிராஸ் பகுதியில் வேணி மற்றும் சதாசிவம் தம்பதியினரின் மகன் ராஜசேகர் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எதிர்பாராத விதமாக வீட்டில் உள்ள ஏசியில் இருந்து புகை வந்துள்ளது.
அருகில் இருந்த பொதுமக்கள் பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.
Comments
Post a Comment