கரூரில் மூத்த வழக்கறிஞரை கத்தியால் குத்திய கொலை முயற்சி - சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் மூன்று பேரை கைது செய்த போலீசார்
கரூரில் மூத்த வழக்கறிஞரை கத்தியால் குத்திவிட்டு 6 லட்சம் பணம், தங்கச் செயின்கள், தங்க காசுகளை கொள்ளையடித்த அவரிடம் பணிபுரிந்த ஜூனியர் வழக்கறிஞர் தனது நண்பர்களுடன் கை வரிசை - சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் வசிப்பவர் ஆறுமுகம் (வயது 71). இவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். நேற்று முந்தினம் இரவு வீட்டில் இருந்த போது மர்ம நபர்கள் 3 பேர் முகத்தில் மாஸ்க் அணிந்து கத்தியுடன் வீட்டினுள் நுழைந்து, கத்தியை காட்டி மிரட்டியும், கத்தியால் வழக்கறிஞர் ஆறுமுகத்தின் முகத்தில் குத்தியும் உள்ளனர். அப்போது வழக்கறிஞர் வீட்டில் இருந்த 6 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க செயின்கள், தங்க காசுகளை கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள வழக்கறிஞர் ஆறுமுகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஃபெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளை கும்பலை போலீசார...