கரூரில் உலக போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுப் பேரணி.
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரி விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
பொதுமக்களிடமும் போதைப் பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதிலிருந்து விடுபடுவதும் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் 26-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டுகரூர் மாவட்ட காவல் துறை உட்கோட்டம் மற்றும் அரசு கலைக் கல்லூரி சார்பில் பங்கேற்றவிழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.இப் பேரணிஅரசு கலைக் கல்லூரியில் இருந்து துவங்கி மில்கேட் சுங்க கேட்வழியாக சென்று மீண்டும் அரசு கலைக் கல்லூரி வந்தடைந்தது.
போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கொண்டு500 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ,மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment