கள்ளச் சாராயத்தை தடுக்க தவறிய தமிழக அரசைக் கண்டித்து கரூரில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கள்ளச் சாராயத்தை தடுக்க தவறிய தமிழக அரசைக் கண்டித்தும், மதுவிலக்கு துறை அமைச்சர் எங்கே போனார் என கோஷங்கள் எழுப்பி கரூரில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.




கரூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு  கள்ளச்சாராயத்தை தடுக்காத தமிழக அரசை கண்டித்தும், நாட்டு சரக்கு வேண்டாம், வீட்டு சரக்கு வேண்டாம் , ஏழை மக்கள் வாழ்வோடு விளையாடவும் வேண்டாம், கள்ளக்குறிச்சி போல் இனி தொடர வேண்டாம் பூரண மதுவிலக்கே வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.





ஆர்ப்பாட்டத்தில் கள்ள சாராயத்தை தடுக்க தவறிய ஸ்டாலின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், தமிழக முழுவதும் கள்ளச்சாரத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட வேண்டும் எனவும், உயர் நீதிமன்ற ஆணையை அமைத்திட வேண்டும், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி எங்கே போனார், சமூக அமைதி கெட்டு போச்சு என கோஷங்கள் எழுப்பி 80க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Comments

Popular posts from this blog

வெண்ணமலை அருகே வீட்டில் பற்றி எரிந்த தீ, ஏசி மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதம் - தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்.

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி வழக்கில் இருந்து விடுவிக்க கோரி பிரதமருக்கு தபால் மூலம் கோரிக்கை.

கரூர் கற்பக விநாயகர் ஆலய வாராகி அம்மனுக்கு ஆனி மாத பஞ்சமி திதி அபிஷேகம் மற்றும் அலங்காரம்.