கரூர் எல்ஜி பி நகர் குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் சங்கடஹரா சதுர்த்தி விழா.
கரூர் எல்ஜி பி நகர் குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு மூலவர் கணபதிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம்.
ஆனி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று பல்வேறு விநாயகர் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட
கரூர் எல்ஜி பி நகர் குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் மூலவர் கணபதிக்கு ஆனி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர்,பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
Comments
Post a Comment