அரசு வழங்கிய இடத்தில் வீடு கட்டி தரக்கோரி மாற்றுத்திறனாளி வழங்கிய 30-க்கும் மேற்பட்ட மனுக்களை மாலையாக அணிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு.
கரூர், வெங்கமேடு அருகே அமைந்துள்ள அண்ணா சாலை மெயின் ரோடு பகுதியில் மாற்றுத்திறனாளி பாபு. மனைவி தீபாவுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.
பாபுவிற்கு இரண்டு கால்கள் செயலிழந்து இருப்பதால் எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. மனைவி கூலி வேலை பார்த்து வருவதால் குடும்பத்தை சமாளிக்க முடியாத நிலை இருப்பதாகவும், இதனால் அரசு வழங்கிய இடத்தில் வீடு கட்டித் தரக் கோரி 30-க்கும் மேற்பட்ட மனுக்கள் வழங்கியும், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
Comments
Post a Comment