குளித்தலை கும்பாபிஷேக விழாவில் பிளக்ஸ் பேனர் தொடர்பான பிரச்சனையில் இளைஞர்கள் தடியடி தாக்குதல்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பொய்யாமணி கிராமம் அம்பேத்கார் நகரில் நேற்று முன்தினம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. கும்பாபிஷேகத்திற்காக அந்த பகுதியில் இளைஞர்கள் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.
இந்நிலையில் அதே பகுதியில் உள்ள மாற்று சமூகத்தினர் பிளக்ஸ் பேனரை கிழித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் ஊர் முக்கியஸ்தர்கள் நிர்வாகிகள் முடிவெடுத்து இனிமேல் பொது இடங்களில் பிளக்ஸ் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும். பிரச்சனைகளை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்துள்ளனர்.
Comments
Post a Comment