கரூரில் அமராவதி ஆற்றங்கரையில் கூட்டாளிகளுடன் மது அருந்திய நபர் தலையில் கல்லை போட்டு கொலை.
கரூர், மண்டிக்கடை அருகில் மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் மண்டிக்கடையில் இருந்து சுக்காலியூரை இணைக்கும் அமராவதி ஆற்றங்கரையில் தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்த முருகவேல் என்பவர் கொட்டகை அமைத்து மணல் மாட்டு வண்டி தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில் முருகவேல் மற்றும் அடையாளம் தெரியாத இரண்டு பேர் அருகில் உள்ள அரசு மதுபான கடையில் மதுபானம் வாங்கி வந்து கொட்டகையில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து கொட்டகை அருகிலேயே அமராவதி ஆற்றங்கரையில் முருகவேல் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டு, கரூர் நகர போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Comments
Post a Comment