கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத பசுபதீஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ சௌந்தரநாயகி, ஸ்ரீ அலங்காரவல்லி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டு தோறும் ஆடி மாதம் 63 நாயன்மார்கள் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு 63 நாயன்மார்களுக்கு, 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று




 அதன் தொடர்ச்சியாக உற்சவர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதிசுவரர் சுவாமிக்கும் சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக ஆலய மண்டபத்தில் 63 நாயன்மார்களுக்கும் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து பின்னர் உற்சவர் ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமிகளுக்கும் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து திருமண கோலத்தில் ஆலய மண்டபத்தில் கொலுவிருக்க செய்தனர்.





மேள தாளங்கள் முழங்க தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார்கள் பிரத்தியேக யாகசாலை அமைத்து யாக வேள்வி நடத்தினர். தொடர்ந்து யாக வேள்விக்கும் 63 நாயன்மார் மற்றும் கல்யாண பசுபதீஸ்வரர், அலங்காரவல்லி, சௌந்தரநாய்க்கும் மகா தீபாராதனை காட்டிய பிறகு ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் ஆடி மாத திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது.

Comments

Popular posts from this blog

வெண்ணமலை அருகே வீட்டில் பற்றி எரிந்த தீ, ஏசி மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதம் - தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்.

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி வழக்கில் இருந்து விடுவிக்க கோரி பிரதமருக்கு தபால் மூலம் கோரிக்கை.

கரூர் கற்பக விநாயகர் ஆலய வாராகி அம்மனுக்கு ஆனி மாத பஞ்சமி திதி அபிஷேகம் மற்றும் அலங்காரம்.