கரூரில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா - செருப்பை கழற்றி வைத்துவிட்டு, பயபக்தியுடன் மரியாதை செலுத்திய த.வெ.க தொண்டர்கள்.

கரூரில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் - செருப்பை கழற்றி வைத்துவிட்டு, பயபக்தியுடன் மரியாதை செலுத்திய த.வெ.க தொண்டர்கள்.




தமிழக முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கரூர் மனோகரா கார்னர் பகுதியில் அமைந்துள்ள 






கர்மவீரர் காமராஜரின் முழு திருவுருவ சிலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, நாடார் ஐக்கிய சங்கம், நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.




குறிப்பாக தமிழக வெற்றி கழகத்தின் கரூர் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் த.வெ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் செருப்புகளை கழற்றி வைத்துவிட்டு, பயபக்தியுடன் மரியாதை செலுத்தினர். மேலும், கர்மவீரர் காமராஜர் புகழ் ஓங்குக! த.வெ.க தலைவர் தளபதி விஜய் புகழ் ஓங்குக! என்று கோஷமிட்டனர்.

Comments

Popular posts from this blog

வெண்ணமலை அருகே வீட்டில் பற்றி எரிந்த தீ, ஏசி மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதம் - தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்.

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி வழக்கில் இருந்து விடுவிக்க கோரி பிரதமருக்கு தபால் மூலம் கோரிக்கை.

கரூர் கற்பக விநாயகர் ஆலய வாராகி அம்மனுக்கு ஆனி மாத பஞ்சமி திதி அபிஷேகம் மற்றும் அலங்காரம்.