கரூரில் தலைமை காவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவருக்கு டவுன் இன்ஸ்பெக்டர் போலீஸ் ஜீப் கதவினை திறந்து கைகுலுக்கி வாழ்த்தி வழி அனுப்பி வைத்த வீடியோ.
கரூர் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பழனிவேல். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு நடந்த பாராட்டு விழாவிற்கு கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் தலைமை வகித்தார்.
விழாவில் ஏட்டு பழனிவேலுவுக்கு ஆய்வாளர் மணிவண்ணன், எவர்கிரீன் பவுண்டேஷன் சேர்மன் ஸ்காட் தங்கவேல், உதவி ஆய்வாளர் மாரிமுத்து உள்ளிட்ட சக போலீசார் வாழ்த்தி பேசி நினைவு பரிசுகளை வழங்கினர்.
குடும்பத்துடன் பணி நிறைவு பாராட்டு விழாவுக்கு வருகை தந்த தலைமை காவலரை, காவல் ஆய்வாளர் மணிவண்ணன் அவரது கைகளை பிடித்து அழைத்து வந்து, தனது போலீஸ் ஜீப்பில் கார் கதவை திறந்து அவரை முன் இருக்கையில் அமர வைத்து கைகுலுக்கி வாழ்த்தி வழி அனுப்பினார்.
Comments
Post a Comment