கரூர் அருகே நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான மாதிரி லோக்சபா தேர்தலில் பூத் ஸ்லிப் வழங்கப்பட்டு எலக்ட்ரானிக் மெஷினில் மாணவர்கள் வாக்கு செலுத்தினர்.
கரூரை அடுத்த மணவாடி பகுதியில் உள்ள (லிட்டில் பிளவர்) தனியார் ஆங்கிலப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் தலைமைப் பண்புகளை வளர்க்கும் வகையில், மாதிரி லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டு, பல்வேறு பொறுப்புகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி, முதலாம் ஆண்டாக நடந்த தேர்தலில், மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் வாக்களித்தனர்.
முன்னதாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பூத் ஸ்லிப் கொடுத்து பள்ளி வளாகத்தில் வரிசையாக நின்று கைவிரல்களில் மை வைத்து, மாதிரி எலக்ட்ரானிக் ஓட்டிங் மிஷினில் வேட்பாளர்கள் நிற்கும் பல்வேறு சின்னங்களில் தாங்கள் விரும்பியவர்களுக்கு தங்களது வாக்கினை செலுத்தினர்.
Comments
Post a Comment