கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி வழக்கில் இருந்து விடுவிக்க கோரி பிரதமருக்கு தபால் மூலம் கோரிக்கை.
கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கிறிஸ்தவ மக்கள் இயக்கம் சார்பில் பிரதமருக்கு தபால் மூலம் கோரிக்கை.
கிறிஸ்த்தவ மக்கள் இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் அகஸ்டின் இன்று கரூர் தலைமை தபால் அலுவலகத்தில், டெல்லியில் உள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை மனு ஒன்றை பதிவு தபால் மூலம் அனுப்பி வைத்தார் .
அந்த மனுவில், கரூர் மாவட்டத்தில் மக்களின் நல்ல மதிப்பை பெற்ற முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உரிமையியல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கினை ரத்து செய்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment