கரூர் திமுகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை  காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில் 1,23,689 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பிரமாண்ட வெற்றியைப் பெற்றுள்ளார். 





இந்த நிலையில், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் மாவட்ட திமுக சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி இடைத்தேர்தல் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.





கரூர் மாநகர திமுக செயலாளர் எஸ்.பி கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் துணை மேயர் தாரணி சரவணன், பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

வெண்ணமலை அருகே வீட்டில் பற்றி எரிந்த தீ, ஏசி மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதம் - தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்.

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி வழக்கில் இருந்து விடுவிக்க கோரி பிரதமருக்கு தபால் மூலம் கோரிக்கை.

கரூர் கற்பக விநாயகர் ஆலய வாராகி அம்மனுக்கு ஆனி மாத பஞ்சமி திதி அபிஷேகம் மற்றும் அலங்காரம்.