கரூரில் சாலையோர பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு - சுகாதாரமில்லாத உணவுப் பொருட்களை பினாயில் ஊற்றி அளித்தனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான பானி பூரி கடைகள் சாலையோரங்களில் செயல்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலும் தள்ளுவண்டிகளில் வைத்து விற்பனை செய்யக்கூடிய வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பானி பூரியை பெரும்பாலான மக்கள் விரும்பி உண்ணுகின்றனர். குறிப்பாக குழந்தைகள் அதிகமாக சாப்பிடுகின்றனர்.
இந்த நிலையில் பானி பூரி கடைகளில் விற்பனை செய்யக்கூடிய உணவு பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் தயார் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் கரூரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சாலையோரமாக விற்கப்படும் பானி பூரி கடைகளில் இன்று திடீர் சோதனையில் இறங்கினர்.
Comments
Post a Comment