கரூர் அருகே வடமாநில பெண் தொழிலாளி தலையில் கல்லைப் போட்டு படுகொலை
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை அடுத்த கொங்குநகரில் முருகையன் என்பவர் பால் பண்ணை நடத்தி வருகிறார். இவரது பால் பண்ணைக்கு உதவியாளர் பணிக்கு ஆள் வேண்டும் என கேட்ட போது,
நடையனூரில் வசிக்கும் வடமாநில ஏஜெண்ட் மூலம் பீகாரை சார்ந்த சாந்த்மதி தேவி என்ற பெண்ணும் அவருடைய கணவர் மற்றும் தம்பி என்பவருடன் கடந்த 1 ம் தேதி வேலைக்கு சேர்ந்து பால் பண்ணையிலேயே தங்கி இருந்துள்ளனர்.
இன்று அதிகாலை 4 மணியளவில் அவர்கள் தங்கி இருந்த இடத்தில் அந்தப் பெண்ணின் கணவர் அப்பெண்ணை அடித்தாக கூறி அவரது தம்பி அருகில் தங்கி வேலை பார்க்கும் தமிழ்நாட்டை சார்ந்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து பால்பண்ணை உரிமையாளர் மற்றும் அருகில் இருப்பவர்கள் அங்கு சென்று பார்த்த போது அப்பெண்ணின் உடல் கிடந்துள்ளது, அவரது கணவர் மாயமாகி இருந்தார். இது தொடர்பாக பால் பண்ணையின் உரிமையாளர் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Comments
Post a Comment