கரூர் அருகே வீட்டில் பற்றி எரிந்த தீ, ஏசி மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதம்: தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்: சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை. கரூர் மாவட்டம் வெண்ணமலை அருகே உள்ள அன்பு நகர் மூன்றாவது கிராஸ் பகுதியில் வேணி மற்றும் சதாசிவம் தம்பதியினரின் மகன் ராஜசேகர் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எதிர்பாராத விதமாக வீட்டில் உள்ள ஏசியில் இருந்து புகை வந்துள்ளது. அருகில் இருந்த பொதுமக்கள் பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.
கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கிறிஸ்தவ மக்கள் இயக்கம் சார்பில் பிரதமருக்கு தபால் மூலம் கோரிக்கை. கிறிஸ்த்தவ மக்கள் இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் அகஸ்டின் இன்று கரூர் தலைமை தபால் அலுவலகத்தில், டெல்லியில் உள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை மனு ஒன்றை பதிவு தபால் மூலம் அனுப்பி வைத்தார் . அந்த மனுவில், கரூர் மாவட்டத்தில் மக்களின் நல்ல மதிப்பை பெற்ற முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உரிமையியல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கினை ரத்து செய்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.
கரூர் கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் வாராகி அம்மனுக்கு ஆனி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம். இன்று பஞ்சமி திதியை முன்னிட்டு பல்வேறு வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ உன்மந்த வாராகி அம்மனுக்கு ஆனி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எழுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து வாராகி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சந்தன காப்பு காட்சியளித்த வாராகி அம்மனுக்கு சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார். அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் மினி பேருந்து நிலையம் அருகே அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய...
Comments
Post a Comment