Posts

Showing posts from February, 2025

வெண்ணமலை அருகே வீட்டில் பற்றி எரிந்த தீ, ஏசி மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதம் - தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்.

Image
கரூர் அருகே வீட்டில் பற்றி எரிந்த தீ, ஏசி மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதம்: தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்: சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை. கரூர் மாவட்டம் வெண்ணமலை அருகே உள்ள அன்பு நகர் மூன்றாவது கிராஸ் பகுதியில் வேணி மற்றும் சதாசிவம் தம்பதியினரின்  மகன் ராஜசேகர் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எதிர்பாராத விதமாக வீட்டில் உள்ள ஏசியில் இருந்து புகை வந்துள்ளது. அருகில் இருந்த பொதுமக்கள் பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.

க.பரமத்தி அருகே கிரசர் மேடு பகுதியில் ஆழ்துளை கிணறு பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு.

Image
க.பரமத்தி அருகே கிரசர் மேடு பகுதியில் ஆழ்துளை கிணறு பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் க.பரமத்தி சுற்றுவட்டார பகுதியில் தமிழகத்திலேயே அதிக வெப்பம் தாக்கும் பகுதியாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஆழ்துளை கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டு உள்ளது. இந்த நிலையில் கிரசர்மேடு என்ற பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் முன்னுர் ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு பழுது பார்க்கும் பணியில் மூன்று ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தபோது.  எதிர்பாராத விதமாக ஆழ்துளை கிணற்றிலிருந்து இரும்பு பைப்புகளை  மேலே எடுக்கும் போது மேலே இருந்த  மின் கம்பத்தில் மோதியதில் இயந்திரம் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது இதில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிமிந்தப்பட்டி பகுதியைச் சார்ந்த சதீஷ் , முன்னுர் பகுதியைச் சேர்ந்த பாலு ஆகிய இருவர் மீதும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.