Posts

Showing posts from June, 2024

கரூர் கற்பக விநாயகர் ஆலய வாராகி அம்மனுக்கு ஆனி மாத பஞ்சமி திதி அபிஷேகம் மற்றும் அலங்காரம்.

Image
கரூர் கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் வாராகி அம்மனுக்கு ஆனி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம். இன்று பஞ்சமி திதியை முன்னிட்டு பல்வேறு வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ உன்மந்த வாராகி அம்மனுக்கு ஆனி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு சுவாமிக்கு  எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எழுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து வாராகி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி,  வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சந்தன காப்பு காட்சியளித்த வாராகி அம்மனுக்கு சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார். அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் மினி பேருந்து நிலையம் அருகே அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய...

கரூரில் அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் 100 கோடி நிலம் மோசடி வழக்கில் முன் பினைக்கான மனுவை தள்ளுபடி .

கரூரில் அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் 100 கோடி நிலம் மோசடி வழக்கில் முன்பினன கோரி மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் அதனை இன்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் முன்பினைக்கான மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் இதனை முன்னாள் அமைச்சர் தரப்பில் மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கள்ளச் சாராயத்தை தடுக்க தவறிய தமிழக அரசைக் கண்டித்து கரூரில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

Image
கள்ளச் சாராயத்தை தடுக்க தவறிய தமிழக அரசைக் கண்டித்தும், மதுவிலக்கு துறை அமைச்சர் எங்கே போனார் என கோஷங்கள் எழுப்பி கரூரில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு  கள்ளச்சாராயத்தை தடுக்காத தமிழக அரசை கண்டித்தும், நாட்டு சரக்கு வேண்டாம், வீட்டு சரக்கு வேண்டாம் , ஏழை மக்கள் வாழ்வோடு விளையாடவும் வேண்டாம், கள்ளக்குறிச்சி போல் இனி தொடர வேண்டாம் பூரண மதுவிலக்கே வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கள்ள சாராயத்தை தடுக்க தவறிய ஸ்டாலின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், தமிழக முழுவதும் கள்ளச்சாரத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட வேண்டும் எனவும், உயர் நீதிமன்ற ஆணையை அமைத்திட வேண்டும், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி எங்கே போனார், சமூக அமைதி கெட்டு போச்சு என கோஷங்கள் எழுப்பி 80க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் எல்ஜி பி நகர் குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் சங்கடஹரா சதுர்த்தி விழா.

Image
கரூர் எல்ஜி பி நகர் குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு மூலவர் கணபதிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம். ஆனி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று பல்வேறு விநாயகர் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட  கரூர் எல்ஜி பி நகர் குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் மூலவர் கணபதிக்கு ஆனி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர்,பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆனி மாத சங்கடகர சதுர்த்தி விழா.

Image
ஆனி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று பல்வேறு விநாயகர் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாசாலை பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும்  அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் மூலவர் கணபதிக்கு ஆனி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர்,பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கரூரில் உலக போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுப் பேரணி.

Image
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரி விழிப்புணர்வுப் பேரணி  நடைபெற்றது. பொதுமக்களிடமும் போதைப் பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதிலிருந்து விடுபடுவதும் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் 26-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.  இதனை முன்னிட்டுகரூர் மாவட்ட காவல் துறை உட்கோட்டம் மற்றும் அரசு கலைக் கல்லூரி சார்பில் பங்கேற்றவிழிப்புணர்வு பேரணி  நடைபெற்றது. இப்பேரணியை, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.இப் பேரணிஅரசு கலைக் கல்லூரியில் இருந்து துவங்கி மில்கேட் சுங்க கேட்வழியாக சென்று மீண்டும் அரசு கலைக் கல்லூரி வந்தடைந்தது. போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கொண்டு500 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ,மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டனர்.

சாலை விபத்தில் சிக்கி பெற வருபவர்கள் மது அருந்தி இருந்தால் ரத்த பரிசோதனை கட்டாயம் : அனைத்து மருத்துவமனைகளுக்கும் அரசு உத்தரவு.

சாலை விபத்தில் சிக்கி பெற வருபவர்கள் மது அருந்தி இருந்தால் ரத்த பரிசோதனை கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்மையில் விபத்து இழப்பீடு தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்படுபவர்கள் மீது மது வாசனை இருந்தால் அந்த அளவுகளை அறிக்கைகளில் பதிவு செய்ய வேண்டும் எனவும் பல வழக்குகளின் அந்த அளவுகள் பதிவு செய்யப்படவில்லை என்றும் அரசுக்கு சுட்டிக் காட்டி இருந்தார். இதன் காரணமாக விபத்து வழக்குகளில் காயம் அடைபவர்களுக்கு உரிய இழப்பீட்டை தீர்மானிக்க முடியாத நிலை உள்ளது என்றும் நீதிபதி குறிப்பிட்டு இருந்தார். எனவே இது தொடர்பாக அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்கும்படி தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். சாலை விபத்து வழக்குகளில் இழப்பீடுகளை தீர்மானிக்க முடியாத நிலை இரு...

இன்றைய (25/06/2024) பெட்ரோல் மற்றும் டீசல் விலை?

Image
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய (25/06/2024) பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.34 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

உங்கள் ஊர் கோயில் திருவிழாவை நமது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்ய தொடர்பு கொள்ளவும்.

Image