Posts

கரூரில் மூத்த வழக்கறிஞரை கத்தியால் குத்திய கொலை முயற்சி - சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் மூன்று பேரை கைது செய்த போலீசார்

Image
கரூரில் மூத்த வழக்கறிஞரை கத்தியால் குத்திவிட்டு 6 லட்சம் பணம், தங்கச் செயின்கள், தங்க காசுகளை கொள்ளையடித்த அவரிடம் பணிபுரிந்த ஜூனியர் வழக்கறிஞர் தனது நண்பர்களுடன் கை வரிசை - சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் வசிப்பவர் ஆறுமுகம் (வயது 71). இவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். நேற்று முந்தினம் இரவு வீட்டில் இருந்த போது மர்ம நபர்கள் 3 பேர் முகத்தில் மாஸ்க் அணிந்து கத்தியுடன் வீட்டினுள் நுழைந்து, கத்தியை காட்டி மிரட்டியும், கத்தியால் வழக்கறிஞர் ஆறுமுகத்தின் முகத்தில் குத்தியும் உள்ளனர்.  அப்போது வழக்கறிஞர் வீட்டில் இருந்த 6 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க செயின்கள், தங்க காசுகளை கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள வழக்கறிஞர் ஆறுமுகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஃபெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளை கும்பலை போலீசார...

கரூர் கல்யாண பசுபதிஸ்வர் ஆலயத்தில் ராகு, கேது பெயர்ச்சி விழா

* கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ராகு, கேது பெயற்சி விழா.* தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சௌந்தர் நாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ராகு, கேது பெயர்ச்சி விழா இன்று நடைபெற்றது. இன்று மாலை ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் . கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அது சமயம் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அது தொடர்ச்சியாக ஆலயத்தில் சிவாச்சாரியார் ராகு கேதுக்கு சிறப்பு அலங்காரம் செய்தார். தொடர்ந்து உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு லட்சார்ச்சனை நடைபெற்று தொடர்ச்சியாக ராகு, கேதுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் நடைபெற்ற ராகு கேது பெயர்ச்சி விழாவை காண ஏராளமான ஆன்மிக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் உள்ளிட்ட நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கல்லீரல் பாதிக்கப்பட்ட இளம் பெண் மனு.

Image
கரூர் மாவட்டம் காசிபாளையம் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், ஜோதி தம்பதியினர்-இரண்டு குழந்தைகளுடன் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். தனது மனைவிக்கு கல்லீரல் செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ஒரு மாதத்திற்குள் ஆபரேஷன் செய்யவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும்,  சிகிச்சைக்காக சுமார் 25 லட்சத்திற்கு மேல் செலவாகும் என்பதால் கூலி வேலை செய்து அன்றாட உணவுக்கு செலவு செய்வதால் மிகவும் சிரமப்பட்டு வருவதாக கூறி மருத்துவ உதவிக்கு நிதி உதவி கேட்டு குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்

வெண்ணமலை அருகே வீட்டில் பற்றி எரிந்த தீ, ஏசி மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதம் - தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்.

Image
கரூர் அருகே வீட்டில் பற்றி எரிந்த தீ, ஏசி மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதம்: தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்: சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை. கரூர் மாவட்டம் வெண்ணமலை அருகே உள்ள அன்பு நகர் மூன்றாவது கிராஸ் பகுதியில் வேணி மற்றும் சதாசிவம் தம்பதியினரின்  மகன் ராஜசேகர் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எதிர்பாராத விதமாக வீட்டில் உள்ள ஏசியில் இருந்து புகை வந்துள்ளது. அருகில் இருந்த பொதுமக்கள் பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.

க.பரமத்தி அருகே கிரசர் மேடு பகுதியில் ஆழ்துளை கிணறு பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு.

Image
க.பரமத்தி அருகே கிரசர் மேடு பகுதியில் ஆழ்துளை கிணறு பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் க.பரமத்தி சுற்றுவட்டார பகுதியில் தமிழகத்திலேயே அதிக வெப்பம் தாக்கும் பகுதியாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஆழ்துளை கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டு உள்ளது. இந்த நிலையில் கிரசர்மேடு என்ற பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் முன்னுர் ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு பழுது பார்க்கும் பணியில் மூன்று ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தபோது.  எதிர்பாராத விதமாக ஆழ்துளை கிணற்றிலிருந்து இரும்பு பைப்புகளை  மேலே எடுக்கும் போது மேலே இருந்த  மின் கம்பத்தில் மோதியதில் இயந்திரம் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது இதில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிமிந்தப்பட்டி பகுதியைச் சார்ந்த சதீஷ் , முன்னுர் பகுதியைச் சேர்ந்த பாலு ஆகிய இருவர் மீதும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கரூர் மாவட்ட திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Image

முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடன் - மக்கள் நீதி மைய தலைவர், நடிகர் கமலஹாசன் திடீர் சந்திப்பு

Image

*தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.*

Image

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி வழக்கில் இருந்து விடுவிக்க கோரி பிரதமருக்கு தபால் மூலம் கோரிக்கை.

Image
கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கிறிஸ்தவ மக்கள் இயக்கம் சார்பில் பிரதமருக்கு தபால் மூலம் கோரிக்கை. கிறிஸ்த்தவ மக்கள் இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் அகஸ்டின் இன்று கரூர் தலைமை தபால் அலுவலகத்தில், டெல்லியில் உள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை மனு ஒன்றை பதிவு தபால் மூலம் அனுப்பி வைத்தார் . அந்த மனுவில், கரூர் மாவட்டத்தில் மக்களின் நல்ல மதிப்பை பெற்ற முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உரிமையியல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கினை ரத்து செய்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத பசுபதீஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி

Image
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ சௌந்தரநாயகி, ஸ்ரீ அலங்காரவல்லி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டு தோறும் ஆடி மாதம் 63 நாயன்மார்கள் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு 63 நாயன்மார்களுக்கு, 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று  அதன் தொடர்ச்சியாக உற்சவர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதிசுவரர் சுவாமிக்கும் சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக ஆலய மண்டபத்தில் 63 நாயன்மார்களுக்கும் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து பின்னர் உற்சவர் ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமிகளுக்கும் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து திருமண கோலத்தில் ஆலய மண்டபத்தில் கொலுவிருக்க செய்தனர். மேள தாளங்கள் முழங்க தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார்கள் பிரத்தியேக யாகசாலை அமைத்து யாக வேள்வி நடத்தினர். தொடர்ந்து யாக வேள்விக்கும் 63 நாயன்மார் மற்றும் கல்யாண பசுபதீஸ்வரர், அலங்காரவல்லி, சௌந்தரநாய்க்கும் மகா தீபாராதனை காட்ட...

விவேகானந்தர் மண்டபத்திற்கான சுற்றுலா படகு சேவையானது தற்காலிகமாக ரத்து

 கன்னியாகுமரி கடலில் ஏற்பட்டுள்ள நீர்மட்டம் தாழ்வின் காரணமாக விவேகானந்தர் மண்டபத்திற்கான சுற்றுலா படகு சேவையானது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கடலின் நீர்மட்டம் தன்மையைப் பொறுத்து காலை 11.30 மணியளவில் படகு போக்குவரத்து சேவை தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று உப்பிடமங்கலம் பகுதியில் மின்தடை

Image
 

தேசிய உறவினர் தின நல்வாழ்த்துக்கள்

Image
 

Mayanur Barrage

 Mayanur Barrage  24.07.2024 /6.00 AM Level 3.69 m  (5.1m) Storage: 383.91 Mcft  Inflow:  Cauvery River: 1101 Cusecs  Out flow:  Cauvery.       : 362 Cusecs  Total   : 362 Cusecs

கரூரில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா - செருப்பை கழற்றி வைத்துவிட்டு, பயபக்தியுடன் மரியாதை செலுத்திய த.வெ.க தொண்டர்கள்.

Image
கரூரில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் - செருப்பை கழற்றி வைத்துவிட்டு, பயபக்தியுடன் மரியாதை செலுத்திய த.வெ.க தொண்டர்கள். தமிழக முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கரூர் மனோகரா கார்னர் பகுதியில் அமைந்துள்ள  கர்மவீரர் காமராஜரின் முழு திருவுருவ சிலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, நாடார் ஐக்கிய சங்கம், நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். குறிப்பாக தமிழக வெற்றி கழகத்தின் கரூர் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் த.வெ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் செருப்புகளை கழற்றி வைத்துவிட்டு, பயபக்தியுடன் மரியாதை செலுத்தினர். மேலும், கர்மவீரர் காமராஜர் புகழ் ஓங்குக! த.வெ.க தலைவர் தளபதி விஜய் புகழ் ஓங்குக! என்று கோஷமிட்டனர்.

கரூரில் அமராவதி ஆற்றங்கரையில் கூட்டாளிகளுடன் மது அருந்திய நபர் தலையில் கல்லை போட்டு கொலை.

Image
கரூர், மண்டிக்கடை அருகில் மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் மண்டிக்கடையில் இருந்து சுக்காலியூரை இணைக்கும் அமராவதி ஆற்றங்கரையில் தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்த முருகவேல் என்பவர் கொட்டகை அமைத்து மணல் மாட்டு வண்டி தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் முருகவேல் மற்றும் அடையாளம் தெரியாத இரண்டு பேர் அருகில் உள்ள அரசு மதுபான கடையில் மதுபானம் வாங்கி வந்து கொட்டகையில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து கொட்டகை அருகிலேயே அமராவதி ஆற்றங்கரையில் முருகவேல் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டு, கரூர் நகர போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கரூர் திமுகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

Image
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை  காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில் 1,23,689 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பிரமாண்ட வெற்றியைப் பெற்றுள்ளார்.  இந்த நிலையில், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் மாவட்ட திமுக சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி இடைத்தேர்தல் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர். கரூர் மாநகர திமுக செயலாளர் எஸ்.பி கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் துணை மேயர் தாரணி சரவணன், பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

குளித்தலை கும்பாபிஷேக விழாவில் பிளக்ஸ் பேனர் தொடர்பான பிரச்சனையில் இளைஞர்கள் தடியடி தாக்குதல்.

Image
கரூர் மாவட்டம்,  குளித்தலை அருகே பொய்யாமணி கிராமம் அம்பேத்கார் நகரில் நேற்று முன்தினம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.  கும்பாபிஷேகத்திற்காக அந்த பகுதியில்  இளைஞர்கள் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள மாற்று சமூகத்தினர் பிளக்ஸ் பேனரை கிழித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் ஊர் முக்கியஸ்தர்கள் நிர்வாகிகள் முடிவெடுத்து இனிமேல் பொது இடங்களில் பிளக்ஸ் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும். பிரச்சனைகளை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்துள்ளனர். 

கரூர் அருகே மளிகை கடையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி என கூறி 52 ஆயிரம் ரூபாயை திருடிய நவீன் குமார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் கார்வழி கிராமத்தைச் சார்ந்த பொன்னுச்சாமி என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி கிராமத்தைச் சார்ந்த நவீன் குமார் என்பவர் தான் ஒரு  உணவு பாதுகாப்பு துறை அதிகாரி என்று மளிகைக் கடையை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி சோதனை செய்து அதன் பிறகு நீங்கள் மருந்து மாத்திரை எதுவும் விற்கக் கூடாது என்று கூறி சில மாத்திரைகளை குப்பையில் வெளியே போட்டு கடையில் இருந்த ரூபாய் 52 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி அவரது பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். இது போன்ற தவறுகள் எதுவும் செய்யக்கூடாது என்று கடை உரிமையாளர்  பொன்னுசாமியை எச்சரிக்கை செய்து அவர் வந்த இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்று விட்டார்.

கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் ஒரு வாரத்திற்குள் 2வது முறையாக பயங்கர தீ விபத்து.

கரூர் 5 ரோட்டில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் அரசு காலனியில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளிலும் உள்ள குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், பொது இடங்களில் தேங்கும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு இந்த குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. குப்பை கிடங்கில் குப்பைகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கிறது.